காலி, நாகொட ஆரம்ப பாடசாலையிலிருந்து மடிக்கணினிகள் உட்பட பெறுமதியான பல உபகரணங்கள் இனந்தெரியாத சிலரால் திருடப்பட்டுள்ளது.
நீண்ட வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று (09.01) காலை பாடசாலை திறக்கப்பட்ட போதே இச்சம்பவம் குறித்து அறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு நேற்று இரவு அல்லது ஓரிரு நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாடசாலையின் அலுவலகத்திலிருந்த பணம், மடிக்கணினிகள் மற்றும் மல்டிமீடியா புரொஜெக்டர் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பாடசாலையின் கட்டிடமொன்றின் ஜன்னல் ஊடாக பாடசாலைக்குள் நுழைந்து காரியாலயத்தில் பொருட்களை திருடியுள்ளதுடன், அலமாரிகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் சேதப்படுத்தியிருப்பதாகவும் பாடசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.