கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று (09.01) கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்ட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த நபர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லாறு பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரும் உயிரிழந்தவர்களும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.