தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல கட்சிகள் இணைந்துள்ளதாகவும், தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுது என்பது தொடர்பிலும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட் ) தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ), பாரளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரது கட்சியான தமிழ் தேசிய கட்சி ஆகியன தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் பாரளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறினார்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியோடு யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் மணிவண்ணன் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில் அவரது அணியும் இந்த கூட்டமைப்புக்குள் உள்ளே வந்துள்ளதாக சித்தார்த்தன் மேலும் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிடுவதாக அல்லது அதற்கு ஒப்பான ஒரு பெயரில் களமிறங்குவதா என்பது தொடர்பிலும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பிலும் விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற மூத்த சிறந்த தலைவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சி இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிடுவது கவலையளிப்பதாக தனது கவலையினை வெளியிடடார்.
