ஹிஸ்புல்லா முஸ்லீம் காங்கிரசில் இணைந்தார்.

முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இன்று (10.01) மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

ஓட்டமாவடி காவத்தமுனையில் வைத்து தனது தாய்க் கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் முன்னிலையில் மீள கட்சியோடு அவர் இணைந்துகொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் இராஜங்க அமைச்சர் அலிஸாகிர் மொளான உட்பட பல கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஹிஸ்புல்லா முஸ்லீம் காங்கிரசில் இணைந்தார்.

Social Share

Leave a Reply