மஹிந்த, கோட்டாவுக்கு கனடா தடை விதித்தது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ சகோதர்கள் உட்பட இராணுவ அதிகாரிகள் இருவருக்கு கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைபெற்ற ஆயுத போராட்டங்களின் போது ஆட்சி அதிகாரங்களில் இருந்த போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த தடையினை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ராஜபக்ஷ சகோதரர்களோடு அலுவலக சார்ஜன்ட் சுனில் ரட்நாயக்க, லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோர் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட பொருளாதரா அளவு கோளின் அடிப்படையில் கனேடிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மெலனி ஜொலி இந்த அறிவிப்பை இன்று(10.01) வெளியிட்டுள்ளார்.

இந்த சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட நபர்கள் கனடாவுக்குள் உள் நுழைவதற்கு தடை செய்யப்படும் அதேவேளை, தடைக்குள்ளானவர்கள் கனடாவில் எந்தவித சொத்துக்களை வைத்திருக்கவோ கொண்டு வருவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை பொறுப்பு கூறலிலிருந்து தொடர்ந்தும் தவிர்த்து வருவதாகும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதனை இது தடுப்பதாகவும், சமாதான முயற்சிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவினை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும் அதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுவதாகவும் மேலும் கனடா அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளோடும், மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து இலங்கையில் மனித உரிமையினை நிலைநாட்ட கனடா ஆதரவு வழங்கும் எனவும் அதற்காக செயற்படுமெனவும் மேலும் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி சூழ் நிலையிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கு கனடா அரசு தொடர்ந்தும் ஆதரவு வழங்குமெனவும் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் நிலைநாட்ட கைகொடுக்குமெனவும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த, கோட்டாவுக்கு கனடா தடை விதித்தது.

Social Share

Leave a Reply