சிறை அனுபவங்களை புத்தகமாக்குவேன் – திலினி

நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணையில் விடுதலையான திலினி பிரியமாலி, தான் பெற்ற சிறை அனுபவங்களை வைத்து புத்தகம் எழுத சிந்தித்து இருப்பதாகவும், தற்போது வழக்கம் போல் தனது தொழிலை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

09 நிதி மோசடி வழக்குகளில் முன்னிலையாவதற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுதலை பெற்றிருந்தார்.

சிறையில் தாம் பெற்ற அனுபவங்களை புத்தகமாக எழுத போவதாக திலினி தெரிவித்துள்ளார்.

சிறை அனுபவங்களை புத்தகமாக்குவேன் - திலினி

Social Share

Leave a Reply