தேர்தல் செலவினங்களுக்கான பணம் தவணை அடிப்படையிலேயே திறைசேரியினால் வழங்கப்படுமென திறைசேரி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளதாக பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவினரை திறைசேரி அதிகாரிகள் சந்தித்த வேளையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவணை முறையிலான கொடுப்பனவுகளுக்கான கால வரையறை வழங்க முடியாது எனவும் மேலும் தேர்தல் திணைக்களத்துக்கு கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு சமூக நலன் திட்டங்களுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டாலே தேர்தலுக்கான பணத்தினை ஒதுக்க முடியுமெனவும் திறைசேரி அதிகாரிகளினல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
