அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சொந்தமான அலுவலகமொன்றிலிருந்து ரகசிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதிக்கு சொந்தமான அலுவலகத்தில் பல ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இல்லத்தில் உள்ள கராஜில் மேலும் பல இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் இன்று (13) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வீட்டில் ஓய்வெடுக்கும்போது, அதிக நேரத்தை கராஜில் செலவிடுவார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி, இந்த ரகசிய ஆவணங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இது தொடர்பாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருக்கும் விசரணைகளுக்கும் தாம் முழு ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய ஆவணங்கள் தொடர்பான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் சில அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.