அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் தொடர் ஆரம்பித்தது.

111 வது அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் போட்டி தொடர் நேற்று (16.01) முதல் எதிர்வரும் 29.01.2023 வரை இடம்பெறவுள்ளது. உலகின் அதிக பார்வையாளர்களை கொண்ட டெனிஸ் போட்டித்தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் உலக தரவரிசையில் முதல் 32 இடங்களை பெறும் ஆண்கள் ஒற்றையார், பெண்கள் ஒற்றையார், ஆண் பெண் இரட்டையார்கள், கலப்பு இரட்டையார் ஆகிய போட்டிகளில் மோத வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

ஒன்பது முறை பட்டத்தை சுவீகரித்த நோவாக் ஜோக்கோவிச் தனது மூன்று வருட தடையிலிருந்து மீண்டு இவ்வருடம் போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை ரசிகர்களுக்கு மேலதிக மகிழ்ச்சியினை வழங்கியிருப்பதுடன் நடப்பு சாம்பியன் ரபேல் நடால்க்கு இம்முறை போட்டி சவால் மிக்கதாகவே காணப்படும்.

கொரோனா தொற்றின் பின்னர் பார்வையாளர்கள் நேரடியாக போட்டிகளை காணும் வாய்ப்பு இம்முறை வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது லட்சம் பார்வையாளர்கள் குறித்த தொடரினை கண்டுகளிக்கவுள்ளனர்.

இம்முறை பட்டத்தினை சுவீகரிக்கும் வீரரிற்கு 2975000 அவுஸ்திரேலியா டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகை கடந்த போட்டித்தொடரை விட 3.38% அதிகமாகும்.

போட்டிகளின் முடிவுகள் மற்றும் முக்கிய விடயங்களுடன் விமீடியா உங்களுக்கான செய்திகளை உடனுக்குடன் வழங்க தயாராகவுள்ளது.

அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் தொடர் ஆரம்பித்தது.

Social Share

Leave a Reply