பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான்!

World of Statistics இன் சமீபத்திய தரவுகளின்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உலகின் நான்காவது பணக்கார நடிகராக முன்னிலை வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தரவுகளின்படி 770 மில்லியன் டொலர் சொத்துக்களை ஷாருக்கான் தன்வசம் வைத்திருப்பதால் ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெருமையை  பெற்றுள்ளார்.

இப்பட்டியலில் சூப்பர் ஹாலிவுட் நடிகர்களான டாம் குரூஸ், ஜாக்கி சான் மற்றும் ஜார்ஜ் குளூனி ஆகியோரை விடவும் ஷாருக்கான் முன்னிலை வகிக்கின்றார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்க நகைச்சுவை நடிகரான Jerry Seinfeld பிடித்துள்ளார், அவரது சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும், சில நடிகர்களின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது,

டாம் குரூஸ்: $620 மில்லியன்

ஜாக்கி சான்: $520 மில்லியன்

ஜார்ஜ் குளூனி: $500 மில்லியன்

ராபர்ட் டி நீரோ: $500 மில்லியன்

பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான்!

Social Share

Leave a Reply