இன்று (17.01) பிற்பகல் கொழும்பு குதிரை பந்தயத் திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டுள்ள யுவதி 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவி எனவும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவி எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இன்று மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரையானா காலப்பகுதிக்குள் குருந்துவத்தை போலீஸ் எல்லைக்குட்பட்ட ரேஸ் கோர்சில் (குதிரைப்பந்தய திடலில்) கொலை நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்ததில் உயிரிழந்த பெண் மாணவி என தெரியவந்தது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி என தெரியவந்துள்ளது. ஆனால் அதனை மேலும் உறுதி செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த மனைவியை கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. வெட்டுக் காயம் காரணமாக அதிகளவு இரத்தம் வெளியேறியதால் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த மாணவி ஹோமாகபகுதியில் வசிக்கும் கிரிவத்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய மாணவி என தெரியவந்துள்ளது.