ஹெலிகொப்டர் விபத்தில் உக்ரைன் அமைச்சர் உட்பட 18 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதியமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

குறித்த விபத்தில் உக்ரைன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, அவரது பிரதியமைச்சர் யெவன் யெனின் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்பள்ளியொன்று அருகே இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், 10 சிறுவர்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஹெலிகாப்டர் கீழே விழுந்ததில் தீப்பற்றி எரிந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து உக்ரைன் அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

 

ஹெலிகொப்டர் விபத்தில் உக்ரைன் அமைச்சர் உட்பட 18 பேர் பலி!

Social Share

Leave a Reply