இலங்கை அணியுடன்தான் இந்தியா அதிரடி நிகழ்த்துகிறது என்று எதிர்பார்த்தவர்களுக்கு நிஸியுஸிலாந்துக்கும் அதிரடி நிகழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று (18.01.2023) ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி அபாரமான வெற்றியினை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியியல் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷுப்மன் கில் 208(149) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 34(38) ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 31(26) ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆரம்பம் முதலே சிறப்பாக துடுப்பாடிய கில் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைவருடனும் இணைப்பாட்டங்களை உருவாக்கி தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இந்தியா அணி சார்பாக பெறப்பட்ட ஏழாவது இரட்டை சதம் இதுவாகும். இந்தியா அணி சார்பாக இரட்டை சதம் பெற்ற ஐந்தாவது வீரர் ஆனார்.
பந்துவீச்சில் ஹென்றி ஷிப்லி, டேரில் மிட்சல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், லுக்கி பெர்குசன்,
பிளைர் திக்னெர், மிட்சல் சந்தனர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்க்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்பம் முதலே தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்களை இழந்த நியூசிலாந்து அணிக்கு மிக்கேல் ப்ரஸ்வெல், மிர்செல் சென்டனர் ஆகியோர் அதிரடி இணைப்பாட்டம் வழங்கி நம்பிக்கை வழங்கினர். 162 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
ப்ரஸ்வெல் தனது இரணடாவது சதத்தை பூர்த்தி செய்து ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இறுதி வரை வெற்றிக்காக அவர் போராடினர். இறுதி விக்கெட்டாக 140 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மிர்செல் சென்டனர் 54(45) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பின் அலன் 40(39) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் இன்றும் சிறப்பாக பந்துவீசி இந்தியா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். அவர் 04 விக்கெட்களை கைப்பற்றினார். இது அவரின் இரண்டாவது நான்கு விக்கெட் பெறுதியாகும். குல்தீப் யாதவும் 2 விக்கெட்களை தனதாக்கினார். மொஹமட் ஷமி, ஷார்தூள் தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
தொடரில் இந்தியா அணி 1 -0 என முன்னிலை பெற்றுள்ளது.
