இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியினை இன்று(19.01) வரை அதன் புதிய தலைவராக வெற்றி பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஊடகவியலாளருமான ஸ்ரீரங்கா இன்று வரை அவரது பதவிகளை பொறுப்பேற்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமைர் நேற்று முன் தினம்(17.01) நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் ஐஸ்வர் காற்பந்து சம்மேளனத்தின் தலைவராக போட்டியிட முடியாது என விளையாட்டு துறை அமைசச்சர் ரொஷான் ரணதுங்க அவரை தடை செய்ததாகவும், அது சட்டத்துக்கு முரணானது எனவும், அதன் காரணமாக புதிய தலைவர் பதவியேற்க கூடாது எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சர்ச்சைக்குரிய தேர்தலில் ஸ்ரீரங்கா 27-23 என்ற அடைப்படையில் வெற்றி பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
