முஜிபுர் ரஹ்மானின் இடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி!

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலகியதையடுத்து செய்ததையடுத்து, வெற்றிடமாகவுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம்.பௌசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20ம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அங்கத்தவர் முஜிபுர் ரஹ்மான், இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததன் மூலம், முன்னாள் அமைச்சரான ஏ.எச்.எம்.பௌசி, நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்படி, வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம்.பௌசியின் பெயரை தெரிவுசெய்து தேர்தல்கள் ஆணைக்குழு விடேச வர்த்தமானி ஒன்றை நேற்று வெளியிட்டது.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 48,701 வாக்குகளை ஏ.எச்.எம்.பௌசி பெற்றிருந்தார்.

முஜிபுர் ரஹ்மானின் இடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி!
முஜிபுர் ரஹ்மானின் இடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி!

Social Share

Leave a Reply