தொடுகை உணர்வு, வெப்ப உணர்வு ஆராய்சிக்காக நோபல் பரிசு

சூரியனது வெப்பம் மற்றும் அன்பான ஒருவரின் அரவணைப்பை எமது உடல்கள் எப்படி உணர்கின்றன எனக் கண்டறிந்த விஞ்ஞானிகள் இருவர் நோபல் பரிசை பகிர்ந்துள்ளனர்.

2021 ம் ஆண்டிற்கான வேதியல் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகிய அறிவியல் நிபுணர்கள் இருவரும் தொடுகை உணர்வு மற்றும் வெப்பநிலையை எவ்வாறு உணர்கின்றோம் என்பது தொடர்பான ஆராய்ச்சியின் மூலம் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.

மனிதனின் நரம்பு மண்டலத்தில் உடல் உணர்வுகள் எவ்வாறு மின் செய்திகளாக மாற்றப்படுகின்றது எனும் கேள்விக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டபோதே இவர்கள் வெப்பம், குளிர் மற்றும் தொடுகை உணர்வுகள் ஆகியவற்றை எமது உடல் எவ்வாறு உணர்கின்றது எனக் கண்டறிந்துள்ளனர்.

தொடுகை உணர்வு, வெப்ப உணர்வு ஆராய்சிக்காக நோபல் பரிசு
மனைவியுடன் டேவிட் ஜூலியஸ்
தொடுகை உணர்வு, வெப்ப உணர்வு ஆராய்சிக்காக நோபல் பரிசு
மகனுடன் ஆர்டெம் படபூட்டியன்

Social Share

Leave a Reply