யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது துப்பாக்கி வெடித்ததில் 38 வயதான விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று(26.01) மாலை தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் விபத்து ஏற்பட்ட போது அவர் வசமிருந்த நாட்டு துப்பாக்கி அழுத்தப்பட்டு வெடித்ததில் அவர் காயமடைந்துள்ளார். காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
