அனுராதாபுரம், மஹாமன்கடவல பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் 30 வயதான தாயும், 10 வயதான மக்களும், 5 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தகப்பன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளையில் தீப்பற்றியுள்ளதாகவும், பக்கத்து வீட்டிலிருந்து வீட்டுக்கு மின்சாரம் பெறப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாமென விசாரனைகளை மேற்கொள்ளும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.