வலுசக்தி அமைச்சர் – பொதுப்பயன்பாடுகள் தலைவர் மோதல்

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சார தடை செய்யப்படுகின்ற சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், இந்த சர்ச்சையில் வலுசக்த்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஆகியோருக்கிடையிலான மோதலும் வலுப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்வதறகான குற்றப் பத்திரிகை தயார் எனவும், விரைவில் அது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர கூறியுள்ளார். அத்தோடு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஜனக ரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் கொமர்ஷியல் வங்கியின் தலைவர் பதவியினை கோரியதாகவும், அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருந்த காரணத்தினால் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை” எனவும் அமைச்சர் காஞ்சன மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனக ரத்நாயக்க கட்சி ஒன்றினூடக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை கூறியதாகவும் அந்த கட்சியினால் அவரது கோரிக்கை நிரக்கரிக்கப்பட்டதாவும் கூறியுள்ள அவர் எவ்வாறு இந்த பதவிக்கு தகுதியானவர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் காஞ்சன விஜயசேகரவின் குற்றப் பத்திரிகைக்காக தான் ஆவலாக ஏதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ள பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீன அமைப்பு எனவும், அரசியல் அமைப்புகள் கூறும் விடயங்களை கேட்டு நடைமுறைப்படுத்தும் அமைப்பு அல்ல எனவும் கூறியுள்ளார்.

இன்று(30.01) முதல் சுயாதீன அமைப்பாக தாம் வழங்கும் அறிவுறுத்தல்களை செயற்படுத்த தவறும் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சருக்கு உயர்தர மாணவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு விருப்பமில்லை எனவும், அதன் காரணமாகவே ஒவ்வொரு கேள்வியாக எழுப்பிக்கொண்டிருக்கிறார் எனவும், மிசாரபைக்குக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் அவரே அமைச்சராக இருப்பதனால் ஒரு பக்கம் கொடுங்கள் என கூறிவிட்டு, மறுபக்கமாக கொடுக்க வேண்டாமென தடை செய்கிறார் எனவும் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சர் தரவுகள் எதுவுமின்றி பேசுகிறார் எனவும், தாம் சகல தரவுகளுடனும் பேசுகிறோம் எனவும் மேலும் கூறியுள்ளார்.

வலுசக்தி அமைச்சர் - பொதுப்பயன்பாடுகள் தலைவர் மோதல்

Social Share

Leave a Reply