அனுராதாபுர சிறைச்சாலையில் அச்சுறுத்தப்பட்ட கைதிகளது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உயர் தீமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்நாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், குறித்த 8 கைதிகளினால், அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அத்தோடு தங்களது பாதுகாப்பு கருதி வடமாகாண சிறைச்சாலைக்கு மாற்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முருது பெர்னாண்டோ, எஸ்.தியாகராஜ ஆகிய நீதி அரசர்கள் குழு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், அனுராதபுரம் சிறைச்சாலை மேற்பார்வையாளர் ஆகியோர் குறித்த 8 கைதிகளதும் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடுமாறு சட்டமா அதிபருக்கு அறிவிறுத்தியுள்னனர்.
ஒக்டோபர் 21 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான M.A சுமந்திரன் கைதிகளின் சார்பாக மன்றில் ஆஜரானார்.