மனித கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது!

மனித கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டை, நோனாகம, வெலிபதன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இவர்களை அழைத்து சென்று சுற்றுலா வீசாவில் லாவோஸுல் இறக்கிவிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், இவர் சுமார் 19 இலட்சம் மக்களிடம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தப்பியோடிய சந்தேக நபர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் நேற்று (06.02) ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், தற்போது லாவோஸில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறும் சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply