ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாஅத்தே தெரிவித்துள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல பிரதேசங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கூட்டத்தாலும், வற்புறுத்தலாலும் மேற்கொள்ளப்படும் தற்போதைய அதிகார ஆட்சி முறையை இல்லாதொழிப்பதற்கு தாம் முன்னுதாரணமாக செயற்படப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.