தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (08.02) பல துறைகளைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், துறைமுகம், பெற்றோலியம், மின்சாரம், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் கொழும்பில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் மருந்துப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் பல அரச வைத்தியசாலை பணியாளர்கள் இன்று 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள வேலை நிறுத்தம் நாளை காலை 8 மணியுடன் நிறைவடையவுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் மஹரகம வைத்தியசாலையில் இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply