கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் ஒரு கோடி 78 இலட்சம் ரூபா அளவிலானன பணம் போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் தன்னுடையது எனவும் அதனை மீளவழங்குமாறும் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கோரிக்கை முன் வைத்திருந்தார். ஆனால் அதனை நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு துறை மூன்று மணி நேரம் விசாரணை நடாத்தி, வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இன்று இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.