சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தை எதிர்வரும் ஏப்ரல் 14ம் திகதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு உத்தியோட்டபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் பெப்ரவரி 17ம் திகதி வெளியாகவுள்ளதாக முன்னதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது திரைப்படம் வெளியாகும் திகதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
