பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று (10 .02) பிற்பகல் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரத்தினபுரி – சிறிபாகம வீதியில் இந்துருவ – மஹவங்குவாவிற்கு அருகில் குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிலிமெல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
