பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே, பொது பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன, பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ன ஆகியோருக்கு எதிராகவே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
சமூக ஆர்வலர்களின் உரிமையினை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாட்டை அவர் மேற்கொண்டுள்ளார். போலியான ஆதாரங்களை உருவாக்கி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
