தேர்தல் பிற்போடப்படும் வாய்ப்பு!

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும், கட்சிகளது செயலாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்கு சீட்டுகள் நாளை(15.02) முதல் விநியோகம் செய்யப்படவேண்டுமெனவும், ஆனால் வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆகவே வாக்கு சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் போதியளவிலான ஆதரவு வழங்கப்படவில்லை எனவும், தேர்தல் திணைக்களத்துக்க சார்பாக வழக்குகளுக்கு முன்னிலையாக மாட்டோம் என கூறியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிற்போடப்படும் வாய்ப்பு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply