ரதெல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு விபத்து!

நுவரெலியா, ஹவாஎலியவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (14.02) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களும் நானுஓயா பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து உடனடியாக காயமடைந்தவர்களை முச்சக்கரவண்டியில் இருந்து மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி குறித்த நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று வேன் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

ரதெல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு விபத்து!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply