எதிர்கால சந்ததியினருக்காக நீர் வளங்களை பாதுகாப்பதற்கு தேவையான தேசிய நீர் கொள்கையை உருவாக்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீர் முகாமைத்துவதில் உள்ள சிக்கல் காரணமாக, நீர் வீணாவதுடன், மாசுபாடும் அதிகரித்து வருகிறது. எதிர்கால சந்ததியினருக்காக நீர் வளங்களைப் பாதுகாப்பது எமது முழுமையான கடமை என்பதனால், தேசிய நீர்க் கொள்கையை உருவாக்குவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலைமையில் இலங்கை மகாவலி அதிகாரசபையில், நேற்று முன்தினம் (13.02) இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் அமைச்சுக்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும், தேசிய நீர் கொள்கையை உருவாக்குவதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் செலயாற்றுவதற்கும் உரிய தரப்பினருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
சில நீர்த்தேக்கத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யூ.டி.சி. ஜயலால், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபையின் தலைவர் என். ரணதுங்க, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பி. கொட்டகம, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் டி.பி. திரிமஹாவிதான, நீர் வழங்கல் சபையின் பொது முகாமையாளர் வசந்த இளங்கசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.