2023 ஆம் ஆண்டுக்கான T20 மகளிர் உலகக்கிண்ண போட்டிகளின் குழுநிலை போட்டிகள் இடம்பெற்றுவருக்கின்றன. நேற்றயதினம்(14.02) இடம்பெற்ற போட்டியில் குழு ஒன்றில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதின. மகளிர் துடுப்பாட்ட போட்டிகளை பொறுத்த வரை ஆஸ்திரேலியா அணி மிகப்பலமான அணியாகவே தன்னை பதிவு செய்து வந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஆரம்பமான T20 உலகக்கிண்ண போட்டிகளின் 08வது தொடர் தென்னாப்பிரிக்காவில் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இதுவரை இடம்பெற்ற தொடர்களில் 05 தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை அணியாக அவுஸ்திரேலியா உள்ளது. இம்முறை உலகக்கோப்பை போட்டியிலும் தனது முதல் போட்டியை நியூஸிலாந்து அணிக்கு எதிராக வெற்றியுடன் ஆரம்பித்திருந்தது அவுஸ்திரேலியா அணி.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணியின் தலைவி நிகர் சுல்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணியின் தலைவி நிகர் சுல்தான் தனித்து நின்று போராடி பெற்றுக்கொண்ட அரைச்சதத்தை தவிர வேறு வீராங்கனைகள் சிறப்பாக செயற்படாமையினால் 20 ஓவர்களில் 07 விக்கற்றுகளை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது பங்களாதேஸ் அணி. பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணி ஜோர்ஜியா வாரெஹம் 03 விக்கட்டுக்களையும், டர்ஸி ஸ்ச்ஹட் 02 விக்கற்றுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி அமெக் லென்னிங்கினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 48 ஓட்டங்களுடனும் அலிஸ்ஸா ஹீலிகினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 37 ஓட்டங்களுடனும் 18.2 ஓவர்களில் இரண்டு விக்கற்றுக்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்று எட்டு விக்கற்றுக்களால் வெற்றிபெற்றது.
பங்களாதேஸ் அணி சார்பில் மறூபா அக்தர் மற்றும் ஷோர்ண அக்தர் தலா ஒவ்வொரு விக்கற்றுக்களை வீழ்த்தினர். மகளிர் T20 உலகக்கிண்ண போட்டிகளில் இன்றய முதற் போட்டியில் குழு இரண்டில் உள்ள இந்தியா மேற்கிந்திய அணிகளும் இரண்டாவது போட்டியில் குழு இரண்டில் உள்ள அயர்லாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.
-ரவிநாத்-
