நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்!

நியூசிலாந்து வெலிங்டனில் 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ச்சியாக 30 வினாடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் ஆக்லாந்து மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய வடக்கு மற்றும் தெற்கு தீவுகள் இரண்டிலும் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு தேசிய அவசரகால முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

 

நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply