புத்தல மாவட்ட வைத்தியசாலையில் கைக்குண்டு!

புத்தல மாவட்ட வைத்தியசாலையின் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த வைத்தியசாலை ஊழியர் ஒருவரால் நேற்று (14.02) கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊழியர் ஒருவர் வைத்தியசாலையை சுற்றியுள்ள சுத்தம் செய்து வேலியை சரிசெய்து கொண்டிருந்தபோது நீல நிற போத்தலில் இருந்து இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கைக்குண்டை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் புத்தள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தல மாவட்ட வைத்தியசாலையில் கைக்குண்டு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply