இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பந்துல பஸ்நாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16.02) காலை உயிரிழந்துள்ளார்.
சுகயீனம் காரணமாக கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே தனது 76வது வயதில் உயிரிழந்துள்ளார்.
1980களில் அரசியலில் பிரவேசித்த இவர் 1994-2000 வரை குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.
மேலும், 2004-2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) பாராளுமன்ற உறுப்பினராகவும், சுற்றாடல் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பந்துல பஸ்நாயக்கவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 19ம் திகதி கல்கமுவவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.