PUCSL தலைவரின் அலுவலகத்திற்கு சீல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

PUCSL தலைவரின் அலுவலகத்திற்குள் பலவந்தமாக ஒரு குழு உள் நுழைந்து முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாகக் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தற்போது வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

PUCSL தலைவரின் அலுவலகத்திற்கு சீல்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply