லைகா படத்தயாரிப்பு நிறுவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக உத்தியோட்டபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘திருவின் குரல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க உள்ளதுடன், இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்திற்கு விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
