டுபாய் ஜூட்டின் சகா ஒருவர் கைது!

குற்றக் கும்பல் ஒன்றின் தலைவனான டுபாய் ஜூட்டின் சகா ஒருவர் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன முகாமைச் சேர்ந்த STF குழுவினர் நேற்று கந்தானை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபரிடம் இருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய சந்தேகநபர் டுபாய் ஜூட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முன்னின்று இயக்கி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

டுபாய் ஜூட்டின் சகா ஒருவர் கைது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply