நேற்று (16.02) கினிகத்தேன – பெரகஹமுல்ல பிரதேசத்தில் இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபீத்தில் நான்கு பேர் காயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இ.போ.ச பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
