இலங்கை வருகிறது ரக்பி உலககிண்ண தொடரின் கிண்ணம்.

ரக்பி உலக கிண்ண தொடரின் சம்பியன் கிண்ணம் மக்கள்பார்வைக்காகவும் , பல நிகழ்வுகளுக்காகவும் நாளை(18.02) கொழும்பு வந்தடையவுள்ளது.

உலக கிண்ணங்களை பார்வையிடுவது என்பது விளையாட்டு ரசிர்கர்களின் கனவு. அந்த கிண்ணங்களை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை காணப்படும். அவ்வாறான ரக்பி உலகக்கிண்ணத்தை பார்வையிடும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது.

ரக்பி உலகக்கிண்ணம் Webb Ellis கிண்ணம் என அழைக்கப்படுகிறது. ரக்பி விளையாட்டினை உருவாக்கியவரின் பெயரே இந்த கிண்ணத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கிண்ணத்தை நியூசிலாந்து, தென்னாபிரிக்கா நாடுகள் தலா மூன்று தடவைகளும், அவுஸ்திரேலியா இரண்டு தடவைகளும், இங்கிலாந்து ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன.

38 சென்டிமீட்டர் உயரமான கிண்ணம் 4.5 கிலோ கிராம் எடையுடையது. நேரில் சென்று இந்த கிண்ணத்தை பார்வையிடுவதன் மூலம் மேலதிக விபரங்களை பெற முடியும்.

நாளை காலை 5.20 இற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள கிண்ணம், கொழும்பு சினமன் லேக் சைட் விடுதிக்கு காலை 8.30 இற்கு கொண்டு செல்லப்படும். அதனை தொடர்ந்து HSBC வங்கியின் நிகழ்வு அங்கு நடைபெற்று, மாலை 04 மணிக்கு விளையாட்டு அமைச்சுக்கு எடுத்துவரப்பப்படவுள்ளது. அங்கேயும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் CR & FC மைதானத்தில் காலை 09 மணி முதல் 05 மணி வரை வைக்கப்படவுள்ளது. மலை 6 மணிக்கு கொமெர்ஷியல் வங்கியின் நிகழ்வு ஒன்று மொனார்ச் இம்பீரியல் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 ஆம் திகதி காலையில் ஹட்டன் நஷனல் வங்கியின் நிகழ்வு காலை வேளையிலும், மாலையில் மாஸ்டர் கார்ட் நிகழ்வு சினமன் லேக் சைட் விடுதியில் இடம்பெறவுள்ளது. மறுநாள் 21 ஆம் திகதி காலை அங்கேயே செலான் வங்கியின் ஏற்பாட்டில் ஒரு நிகழ்வும், அன்று மதியம் 1 மணிக்கு LOLC தலைமையகத்தில் ஒரு நிகழ்வும் நடைபெறவுள்ளன.

22 ஆம் திகதி கண்டி நோக்கி பயணிக்கும் கிண்ணம் காலை 10 மணி முதல் 2 மணி வரை கண்டி விளையாட்டுக்குகழகத்திற்கு எடுத்துச் செல்லப்படும். மாலை 5 மணிக்கு NTB வங்கியின் நிகழ்வுக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மறுநாள் காலை கொழும்பு டயலொக் தலைமயக்கத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. அங்கு காலை 9.30 இற்கு நடைபெறும் இறுதி நிகழ்வோடு மதியம் 12 மணிக்கு விமான நிலையம் நோக்கி பயணிக்கவுள்ளது.

இலங்கை வருகிறது ரக்பி உலககிண்ண தொடரின் கிண்ணம்.
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply