விவசாயத்தை பாதிக்கும் 6 விலங்குகளை கொலை செய்யலாம் – அமைச்சர்

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 விலங்குகைளயும் ஒரு பறவையினையும் கொல்ல முடியுமென விவசாய துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரண்டு விதமான குரங்குகள், முள்ளம் பன்றி, காட்டுப்பன்றி, இராட்சத மர அணில் ஆகிய விலங்குகளுடன் மயில் ஆகியன விவசாயத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதனால் கொலை செய்யக்கூடாத விலங்குகள் அல்லது பாதுகாக்கப்படவேண்டிய விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மிகவும் தீர்க்கமாக ஆராய்ச்சி செய்தும், சர்வதேச தகவல்களை அடிப்படையக வைத்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

உரிய முறையினை பாவித்து விவசாயிகள் இந்த உயிரினங்களை கொலை செய்ய முடியுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை பாதிக்கும் 6 விலங்குகளை கொலை செய்யலாம் - அமைச்சர்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply