தேர்தல் செலவினங்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் கோரப்பட்ட பணத்தினை திறைசேரியினால் வழங்க முடியாதென நிதியமைச்சின் செயலாளர் தமக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதர நிலவரத்தின் கீழ் பணத்தை வழங்க முடியாது எனவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பணத்தை வழங்குமாறு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் மேலும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று(17.02) தேர்தல் ஆணைக்குழு தபால் மூல வாக்களிப்பை மாற்று திகதியின்றி பிற்போட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
6 மாதத்துக்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாதவிடத்து மீண்டும் புதிதாக வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இப்போதைக்கு நடைபெறுவது சந்தேகமெனவும், அடுத்து ஜனாதிபதி தேர்தலே வருமெனவும் அதுவும் இப்போதைக்கு இல்லை எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
