எரிபொருளுக்கான தற்போதைய QR முறையானது அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை மேம்படுவதன் மூலம் போதியளவு எரிபொருள் விநியோகத்தை வழங்க முடியும் எனவும் எதிர்வரும் மூன்று மாதங்களின் பின்னர் மக்கள் தமக்கு தேவையான அளவு எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வழமைபோல் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
