தரமற்ற அழகுசாதன பொருட்கள் போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் விற்பனை!

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து, அழகு நிலையங்கலில் பயன்படுத்தப்படும், 58 வகையான தரமற்ற க்ரீம்கள், மருந்துகள் உள்ளிட்ட பெருமளவிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பாலுணர்வைத் தூண்டும் தரமற்றபல அழகுசாதன பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த தயாரிப்புகள் அனைத்தும் 04 வருடங்களாக போலியான சமூக வலைதள கணக்குகள் ஊடாக சந்தைப்படுத்தபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த செயற்பாடுகளை மேற்கொண்ட 03 போலியான சமூக வலைதள கணக்குகள் பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த பொருட்கள் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டவை என குறிப்பிடும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தரமற்ற அழகுசாதன பொருட்கள் போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் விற்பனை!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply