அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை,பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கள், வங்கிச் சேவை உடப்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று (22.02) பகல் 12 மணியளவில் கோட்டை புகையிர நிலையம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
தம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தாவிட்டால் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமது தொழிற்சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் இணை செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளதுடன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு நடுத்தர மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதை விட அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விசேட வரபிரசாதங்களை குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணலாம் எனவும் பொது மக்களை மட்டுமே இதனால் பாதிக்கப்படுவதாகவும், இதுவரையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான சலுகைகள் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை எனவும் துறைமுக ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்துள்ளார்.
