இன்று(23.02) தேர்தலை பிற்போட கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உருவாகியுள்ளது.
தேர்தலை பிற்போட வேண்டும் என கோரி ஓய்வு பெற்று இராணுவ உயர் அதிகாரி ஒருவர் இந்த மனுவினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
நிதியின்மையினால் தேர்தலை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. அத்தோடு தமது பணிகளை இடை நிறுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
