சீன எல்லையை அண்மித்துள்ள தஜிகிஸ்தானில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நில நடுக்கம் ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றுமொரு பாரிய அதிர்வும் ஏற்பட்டுள்ளது.
சீன எல்லையில் இருந்து 82 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஜிகிஸ்தானிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் ஹிமாச்சல் உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரிய நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பூர்ணசந்திர ராதி இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது ரிக்டர் அளவுகோலில் அதிக அளவை கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அதிக அவதானம் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
