அரச மருத்துவமனைகளுக்கு டீசல் நன்கொடை வழங்கும் ஜப்பான்!

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (22.02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 20 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கவுள்ளதுடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கையில் மருத்துவ சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச மருத்துவமனைகளுக்கு டீசல் நன்கொடை வழங்கும் ஜப்பான்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply