உத்தியோகபூர்வ அறிவிப்பற்ற தேர்தலை எவ்வாறு பிற்போட முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், தேர்தல் முடிவெடுக்கப்பட்ட கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரம் இல்லையெனவும் மேலும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தேர்தல்களுக்கான திகதி தீர்மானிக்கும் கூட்டத்துக்கு இருவர் மட்டுமே சமூகமளித்திருந்ததாகவும், கூட்டம் ஒன்றில் முடிவெடுக்கப்படுவதாக இருந்தால் மூவர் இருக்க வேண்டுமெனவும், இருவர் முடிவெடுத்து அறிவித்துள்ளமை சட்டத்துக்கு முரணனானது எனவும் மேலும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
தேர்தலுக்கான பணம் தேர்தல் ஆணைக்குழுவினால் கோரப்படவில்லை எனவும், தேர்தல் திணைக்களத்தின் கணக்களரினால் கோரப்பட்டுள்ளது எனவும் மேலும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
