தேர்தலை பிற்போட கோரிய வழக்கு பிற்போடப்பட்டது

இன்று(23.02) தேர்தலை பிற்போட கோரிய வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேர்தலை பிற்போடக் கோரிய மனு மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

தேர்தலை பிற்போட வேண்டும் என கோரி ஓய்வு பெற்று இராணுவ உயர் அதிகாரி ஒருவர் இந்த மனுவினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நிதியின்மையினால் தேர்தலை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. அத்தோடு தமது பணிகளை இடை நிறுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இவ்வாறான நிலையில் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக ஆய்விக்கப்படவில்லை எனவும், உரிய சட்ட திட்டங்களுக்காக அமைவாக அறிவிக்கப்படவில்லை எனவும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போட கோரிய வழக்கு பிற்போடப்பட்டது
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply