வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது!

போராட்டத்தில் ஈடுபட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 பிக்கு மாணவர்களும் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போராட்ட குழுவினர்,பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கல்வியை மீள ஆரம்பிக்குமாறு கோரியும், கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply